பாடல் எண் : 1
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே .
பொழிப்புரை:
ஐவர் பணியாளர்க்குத் தலைவன் ஒருவன்; அவனே அவ்வூர்க்கும் தலைவன். அவன், தான் நலன் அடைதற் பொருட்டுத் தனதாகக் கொண்டு ஏறி உலாவுகின்ற குதிரை ஒன்று உண்டு. அது வல்லார்க்கு அடங்கிப் பணிசெய்யும்; மாட்டார்க்கு அடங்காது குதித்து அவரைக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடும்.
குறிப்புரை:
'ஆகவே, அதனை அடக்க வல்லராதலைப் பயிலுதலே ஆண்மையுடையோர்க்கு அழகாகும்' என்பது குறிப்பெச்சம்.
இத்திருமந்திரம் பிசிச் செய்யுள். இதனை, 'ஐவர், ஐம் பொறிகள்; நாயகன்; உயிர்க்கிழவன்; ஊர், ஐம்பொறியும் தங்கி யுள்ள உடம்பு; குதிரை பிராணவாயு; துள்ளி விழுத்தல், வாழ்நாள் முடிவில் அவரறியாதவாறு விட்டு நீங்குதல்' என விடுத்துக் கண்டுகொள்க. "மெய்யர், பொய்யர்" என்பன, வன்மை மென்மை பற்றி வந்தன. 'பொய்யரை வீழ்த்திடும்' எனவே, 'மெய்யரை வீழ்த்தாது செல்லும்'
என்பது பட்டு, மெய்யர்க்கு வாழ்நாள் நெடிது செல்லுதலும், அவர் விடுத்து நீக்க நீங்குதலும் உளவாதலை உணர்த்தி நிற்கும்.
இதனால், பிராணாயாமம் செய்வார் மக்களுடம்பை நெடிது நிறுத்திப் பயனடைதல் கூறப்பட்டது.
English Transliteration:
aivarkku :naayakan avvoorth thalaimakan
uyyakko'n dae'rung kuthiraima'r 'ron'ru'ndu
meyyarkkup pa'r'ruk kodukkum kodaathupoayp
poyyaraith thu'l'li vizhuththidu:n thaanae
English Translation:
The mind is the master of senses five;
He is the head of the body habitat;
There is a steed he rides to his destined goal;
The masterly one the steed carries,
The feeble one it throws away
—That steed the Prana breath is.

No comments:
Post a Comment