பாடல் எண் : 10
வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே .
பொழிப்புரை:
பூரக இரேசகங்களை முற்கூறியவாறு இடைகலை பிங்கலைகளால் செய்தலே முறையாம். கும்பகத்தை ஓமத்தானமாகிய உந்தித் தானத்திற் செய்தலே முறையாம்.
குறிப்புரை:
'உண்மை' என்பது "இவ்விரண்டு" என்பதனோடும் இயையும். "வாமத்தில் பூரித்து, பிங்கலைக்கண் இரேசித்து ஆக, இவ்விரண்டு உண்மை; ஓமத்தால் கும்பிக்க உண்மை" என்க. ஆதல்- முடிதல். 'இவ்விரண்டு' என்ற சுட்டு, பூரக இரேசகங்களைச் சுட்டிற்று. உண்மை - செம்மை. 'ஓமம்' என்பது ஆகுபெயராய் அதற் குரிய இடத்தை உணர்த்திற்று. அகப் பூசையில் இருதயம் பூசைத் தானமாகவும், நாபி ஓமத்தானமாகவும், புருவ நடு தியானத் தானமாகவும் கொள்ளப்படுதல் அறிக. "ஓமத்தால்" என்பது உருபு மயக்கம். இதற்கு "ஓம்" என்னும் அம்மந்திரத்தால் எனவும் உரைப்பர். "ஆக, கும்பிக்க" என்ற எச்சங்கள். "உண்மை' என்னும் குறிப்பு வினை கொண்டன. "உண்மையது" எனற்பாலதனை 'உண்மை' என்றே கூறுதல் பிற்கால வழக்காயிற்று. ஆகவே, அப் பண்புச் சொல் பண்பிமேல் நின்றதாக உரைத்துக் கொள்ளப்படும். "கும்பிக்க" என்பதன்பின், "அஃது" என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
இதனால், மேல் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டது, எடுத்தோதி வலியுறுத்தப்பட்டது. முன்னவை இரண்டும் அனுவாதம்.
Transliteration:
vaamaththil eereddu maaththirai pooriththae
aemu'r'ra muppath thira'ndum iraesiththuk
kaamu'r'ra pingkalaik ka'n'naaka ivvira'n
doamaththaal eddedduk kumpikka u'nmaiyae
Translation:
Inhaling six and ten matras by left nostril
Retaining four and sixty in the Homa-pit of the navel
Exhaling two and thirty by the right nostril,
They who control breath thus,
Have verily seen the Light of Truth.

No comments:
Post a Comment