Friday, January 3, 2020

Thirumoolar Pranayama - Song 12 (Tamil, English)

பாடல் எண் : 12    

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே  .

பொழிப்புரை:
வெளி வருவதும், உட்புகுவதுமாய்ப் பயனின்றி அலைகின்ற பிராண வாயு, மேற்கூறிய நெறிக்குட்பட்டு நிற்குமாற்றால் தூயதாகச் செய்யின், உடம்பு ஒளிவிட்டு விளங்கும்; தலை, முகம் முதலானவற்றில் உள்ள மயிர்கள் நரையாது கறுப்பனவாம். இவற்றினும் மேலாகச் சிவபெருமான் அத்தகைய யோகியின் உள்ளத்தை விட்டுப் புறம் போகான்.

குறிப்புரை:
"புறப்பட்டுப் போகான்" என்றது `தியானம் சலியாது' என்றவாறாம். எனவே, "இதுவே பிராணாயாமமாகிய பேருழைப் பிற்குச் சிறந்த பயன்" என்பது போந்தது.இதனால், பிராணாயாமம் மேல் வரும் யோக உறுப்புக்கட்கு இன்றியமையாச் சாதனமாதல் கூறப்பட்டது.

Transliteration:
pu'rappaddup pukkuth thirikin'ra vaayuvai
:ne'rippada u'l'lae :ninmala maakkil
u'ruppuch sivakkum uroamang ka'rukkum
pu'rappaddup poakaan purisadai yoanae

Translation:
The breath within rises
And wanders as it lists;
Control that and purify within;
Then shall your limbs glow red
Your hair turn dark
And God within shall leave you never.

No comments:

Post a Comment